ஐபிஎல் இந்த சொல்லுக்கு மயங்காதவர் எவரும் இல்லை ஊருக்குள்ள ரெண்டுபேரு அடிச்சிகிட்டா நேரம்போலன்னு வேடிக்கை பார்ப்போம் அதுதாங்க இந்த ஐபிஎல். ஆனா கொஞ்சம் வித்தியாசம் இங்க படை வீரர்களின் திறமையை சோதிக்கிற இடம்தான் இந்த ஐபிஎல் .நா ஜெயிச்சிட்ட ஜெயிச்சிட்ட என்று வடிவேலு படம் வசனம் பேசிட்டு கடைசியில காசிப்ப கடைல கப் வாங்குற தண்ணி கொடுக்காத மாநிலம் மாதிரி இல்லாம சிங்கம் சிங்கிளா தா வரும் என்று சொல்ற சூப்பர்ஸ்டார் தா நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் …
ஒரு குடும்பம்னு இருந்தா அங்காளி பங்காளி சண்ட இருக்கதா செய்யும் அதே மாதிரிதாங்க இந்த சென்னையும் மும்பையும், இந்தியா VS பாக்கிஸ்தான் போட்டிக்கு அடுத்தப்படியா இவுங்கதா அப்படி ஒரு ராசிக்காரனுங்க .இதுவரைக்கும் நடந்த ஐபில் போட்டிகளில் சென்னை மற்றும் மும்பை 26 ஆட்டங்களில் சந்திச்சிருக்கு இதுல சென்னை 11 ஆட்டத்திலும் மும்பை 15 ஆட்டத்திலும் வெற்றி பெற்றிருக்கிறது இதுல மும்பையின் கைதான் ஓங்கியிருக்கிறது.
இந்த ஐபிஎல்லில் நடந்த இரண்டு போட்டிகளில் சென்னை அணி மும்பையிடம் தோல்விய தழுவியது. வருகிற குவாலிபைர் 1 சென்னையில் நடைபெறுகிறது, இதில் சென்னை மற்றும் மும்பை மோதுகிறது .இப்போட்டியில் வெற்றி பெரும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கும் , தோல்வியடைகிற அணி குவாலிபைர் 2-ல் வெற்றி பெரும் அணியோட போட்டி போட்டு இறுதி போட்டிக்கு செல்லும்.
ஆனா ஒன்னுங்க சென்னை மற்றும் மும்பைக்கு நடக்க இருக்கிற இந்த குவாலிபைர் 1 ரசிகர்களுக்கு நல்ல விருந்தாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை .பொறுத்திருந்து பார்ப்போம் பழி தீர்க்குமா சென்னைன்னு,உங்கள் கருத்தை சொல்லுங்க ரசிகர்களே, இதுல யாரு வெற்றி பெருவாங்க பாப்போம் உங்க ஜோசியத்தை .
.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…