#IPL2020 : அரை சதம் அடித்த தினேஷ் ,கில் ! பஞ்சாப் அணிக்கு 165 ரன்கள் இலக்கு

இன்றைய ஐபிஎல் போட்டியில் முதலில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 164 ரன்கள் அடித்துள்ளது.
இன்று நடைபெற்று வரும் 24-வது ஐபிஎல் போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் , லோகேஷ் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணியும் மோதி வருகின்றது.இந்த போட்டி அபுதாபியில் உள்ள சையத் மைதானத்தில் (Zayed Stadium) நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக திரிபாதி ,கில் ஆகியோர் களமிறங்கினார்கள்.ஆனால் ஆட்டத்தின் தொடக்கத்திலே கொல்கத்தா அணியின் வீரர் முகமது சமி பந்துவீச்சில் திரிபாதி 4 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இவரைத்தொடர்ந்து நிதிஷ் ராணா 2 ரன்களில் ரன் -அவுட் ஆகி வெளியேறினார்.கில் மற்றும் மோர்கன் ஓரளவு சிறப்பாக விளையாடியது.ஆனால் மோர்கன் 24 ரன்களில் பிஷ்ணோய் பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். பின்பு சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த கில் 57 ரன்களில் ஆட்டமிழக்க ,ரஸ்சல் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் எடுத்துள்ளது.களத்தில் கம்மின்ஸ் 5* ரன்களுடன் இருந்தார். தினேஷ் கார்த்திக் கடைசி பந்தில் 58 ரன்களில் ரன் அவுட்டாகினார். பஞ்சாப் அணியின் பந்துவீச்சில் சமி ,ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினார்கள்.165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!
February 28, 2025
AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!
February 28, 2025