ஐபிஎல் தொடரில் கிங் கோலியின் புதிய சாதனை.! வேற யாருமே இல்ல..! அப்படி என்ன செய்தார்?
920 பவுண்டரிகளை விளாசிய தவான் 2வது இடத்திலும், 768 பவுண்டரிகளை விளாசிய வார்னர் 3வது இடத்திலும் உள்ளார்.

பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில் மற்றொரு சாதனையைப் படைத்துள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இச்சாதனையை அவர் படைத்தார்.
அதாவது, ஐபிஎல் கிரிக்கெட்டில் 1,000 பவுண்டரிகள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை ஆர்சிபி வீரர் விராட் கோலி புரிந்துள்ளார். நேற்றைய தினம், முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 164 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி இறுதியாக 17.5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதில், பெங்களூர் அணி சார்பாக, விராட் கோலி 22 ரன்கள் எடுத்தார். அப்பொழுது அவர், இரண்டு சிக்ஸர்களையும் ஒரு பவுண்டரியையும் அடித்தார். இதன் மூலம், இந்தியன் பிரீமியர் லீக்கில் 1000 பவுண்டரிகளை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். அவருக்கு அடுத்து ஷிகர் தவான் 920 பவுண்டரிகளுடன் 2-வது இடத்திலும், டேவிட் வார்னர் 899 பவுண்டரிகளுடன் 3-வது இடத்திலும், 885 பவுண்டரிகளுடன் ரோஹித் ஷர்மா 4-வது இடத்திலும் உள்ளனர்.
ஐபிஎல் தொடங்கியதிலிருந்து விராட் கோலி ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல்லில் விராட் 721 பவுண்டரிகளையும் 280 சிக்சர்களையும் அடித்துள்ளார். சொந்த மைதானத்தில் ரசிகர்களுக்கு முன்பாக ஒரு அற்புதமான சிக்ஸர் அடித்து கோலி இந்த சாதனை பட்டியலில் இடம்பிடித்தார். விராட் கோலி இதுவரை 257 ஐபிஎல் போட்டிகளில் 38.82 சராசரியுடன் 8190 ரன்கள் எடுத்துள்ளார். இந்த பேட்ஸ்மேன் ஐபிஎல்லில் 8 சதங்களையும் 57 அரைசதங்களையும் அடித்துள்ளார்.
ஐபிஎல்லில் அதிக பவுண்டரிகள்:
- 1001 – விராட் கோலி
- 920 – ஷிகர் தவான்
- 899 – டேவிட் வார்னர்
- 885 – ரோஹித் சர்மா