பாகிஸ்தான் அணி சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள கிங் கோலி இருக்காரு! சஞ்சய் பங்கர் ஸ்பீச்!

sanjay bangar about virat

ஆசியகோப்பை 2023 : நாளை நடைபெறவிருக்கும் போட்டியில் கிரிக்கெட் ரசிகர்களே ஒட்டுமொத்தமாக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதுகிறது. நாளை நடைபெறவிருக்கும் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதற்கிடையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கர் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை விராட் கோலி அருமையாக எதிர்கொண்டு விளையாடுவார் என சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக சூப்பர் பார்ம்

இது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கர் ” விராட் கோலி பாகிஸ்தான் அணிக்கு எதிராக நன்றாக விளையாடி இருக்கிறார். இதற்கு முன்பாக கடைசியாக விளையாடிய போது, ​​விராட் ஒரு சிறப்பான இன்னிங்ஸுடன் வெளியேறினார். 60 ரன்கள் அடித்தார் அந்த போட்டியில் அவருடைய பேட்டிங்கை நீங்கள் பார்த்தால் தனியாக தெரியும். அதைபோலவே நாளை நடைபெறும் போட்டியிலும் அருமையாக விளையாட அவர் தயாராக இருக்கிறார்” எனவும் கூறியுள்ளார்.

ஷாஹீன் ஷா அப்ரிடிக்கு எதிராக அதிரடி தான் 

மேலும் தொடர்ந்து பேசிய சஞ்சய் பங்கர் ” பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடிக்கு எதிராக  விராட் கோலி அதிரடியாக விளையாடுவார் என நான் எதிர்பார்க்கிறேன். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிரான கோலியின் பேட்டிங்கை நீங்கள் பார்த்தால் ஷாஹீன் ஷா அப்ரிடி போன்ற சுழற் பந்து வீச்சாளர்களை அவர் எதிர்கொள்ளும்போது கால்களை பின் நோக்கி நகர்த்தி நேரம் கொடுத்து குறிவைத்து பந்தை அடிப்பார்” என சஞ்சய் பங்கர்  கூறியுள்ளார்.

ஆவலுடன் காத்திருக்கிறேன் 

பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் விராட் கோலி நல்ல பார்மில் இருப்பதால் கண்டிப்பாக சிக்ஸர் பவுண்டரி அடித்து தன்னுடைய அசத்தலான விளையாட்டை வெளிக்காட்டுவார் என நான் மிகவும் ஆவலுடன் அவருடைய பேட்டிங்கை பார்ப்பதற்கு காத்திருக்கிறேன். அவருக்கு ஏரளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதில் நானும் ஒருவர். அவருடைய பேட்டிங் மிகவும் ஸ்டைலிஸ் ஆக இருக்கும்” எனவும் விராட் கோலியை பற்றி

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்