மன்சூர் அலிகான் பட்டோடி சாதனையை முறியடித்த கிங் கோலி..!
ஆஸ்திரேலியா-இந்தியா முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்தியா கேப்டனாக கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். 1964 முதல் 1969 வரை இந்தியா கேப்டனாக மன்சூர் அலிகான் பட்டோடி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 829 ரன்கள் பதிவு செய்திருந்தார்.
மன்சூர் அலிகான் 11 டெஸ்ட் போட்டிகளில் 829 ரன்கள் எடுத்தார். அதில், 1 சதமும், 8 அரைசதங்களும் அடங்கும். இந்நிலையில், இன்றைய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி 74 ரன்கள் எடுத்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கேப்டனாக கோலி 10 டெஸ்ட் போட்டிகளில் 851 ரன்கள் எடுத்து மன்சூர் அலிகான் பட்டோடி சாதனையை முறியடித்துள்ளார். இந்த 10 போட்டிகளில் கோலி 4 சதங்களையும், அரை சதங்களையும் அடித்துள்ளார்.
இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 89 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 233 ரன்கள் எடுத்து உள்ளன. தற்போது களத்தில் விருத்திமான் சஹா 9 அஸ்வின் 15 ரன்களுடனும் உள்ளனர்.