இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டன் கோழி, 60 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்து, 36 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, டெஸ்ட், டி-20, ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனைதொடர்ந்து ஐந்தாம் டெஸ்ட் போட்டி, நரேந்திர மோடி மைதானத்தில் வரும் 12 ஆம் தேதி தொடங்குகிறது. இதன்மூலம் இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கும் தகுதி பெற்று, ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் நியூசிலாந்துடன் மோதவுள்ளது.
இந்திய டெஸ்ட் வரலாற்றில் அதிக போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த பெருமையை தோனி மற்றும் கோலி கைப்பற்றினார்கள். இருவரும் 60 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். இதில் தோனி 27 போட்டிகளிலும், கோலி 36 போட்டிகளில் வெற்றிபெற்று, தோனியை முந்தினார். ரன் மேசின், சிறந்த பேட்ஸ்மேன், GOAT, என்று விராட் கோலியை ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருகின்றனர்.
இந்தவரிசையில் கோலி, கேப்டனாகவும் தனது சாதனைகளை குவித்து வருவது, ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி, ஆஸ்திரேலியாக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்று, அடுத்ததாக இந்தியாவில் இங்கிலாந்தையும் தோற்கடித்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது, குறிப்பிடத்தக்கது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…