இந்திய அணியில் கேப்டனான “கிங் கோலி”, நேற்று தனது 32 ஆம் பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அந்த வகையில், நேற்று அவரது பிறந்த நாளை அவரது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் அவரது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி உட்பட மற்றவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். இதனை, துபாயில் விராட்டின் பிறந்தநாளை கொண்டாடிய வீடியோக்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலானது.
அந்த வீடியோவில், ஒரு கிளிப்பில் விராட் தனது பிறந்தநாள் கேக்கை வெட்டுவதைப் பார்க்கலாம் மேலும் அவரைச் சுற்றியுள்ள அனைவரும் ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று பாடி கைதட்டினர். அவரது பக்கத்தில் நிற்கும் அனுஷ்கா, அவருக்கு முதல் கேக்கை ஊட்டினார், அதன் பிறகு அவர் அவளுக்கு ஒரு துண்டு கொடுக்கிறார். பின்னர் விராட் தனது மனைவிக்கு நெற்றியில் முத்தமிட்டார்.
அதன் பின்னர், விராட்டின் முகத்தில் கேக் பூசப்பட்டிருக்கும் படங்கள் மற்றும் வீடியோக்களும் இணையதளத்தில் வைரலாகியது. நடந்துகொண்டிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக்கில் தனது அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பிளேஆஃப்களில் இடம் பிடித்திருப்பதால், கிரிக்கெட் வீரர் பிறந்தநாள் இரட்டை சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில், இவரது பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிவிட்டு, அதன் பின்னர் கப்பலில் ஒரு நைட் பார்ட்டி போல் அமைக்கப்பட்டுள்ளது. அதில், அனைவரும் டான்ஸ் ஆடினார்கள், அந்த வகையில் தனது பிறந்தநாளை விராட் கோலியும் உற்சாகமாக டான்ஸ் ஆடி கொண்டாடினார் இதோ, அந்த வீடியோ……
டெல்லி : வரும் பிப்ரவரி மாதம் டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில்…
சென்னை : எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி பன்னாட்டுக் கருத்தரங்கு…
மும்பை : ஷங்கர் இயக்கத்தில் அரசியல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம்…
சென்னை : தமிழ்நாட்டில் வரும் 10, 11 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 24வது மாநில மாநாடு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி விழுப்புரம் – சென்னை தேசிய…