ஐபிஎல் போட்டிகளில் 6,000 ரன்கள கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றார்.
ஐபிஎல் தொடரின் 16 வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தனர்.
அடுத்ததாக 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி 16.3 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி 47 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் விராட் கோலி 51வது ரன் எடுத்தபொழுது, ஐபிஎல் போட்டிகளில் அவர் அடித்த ரன்களின் எண்ணிக்கை 6,000 கடந்தது. மேலும் 6,000 ரன்கள கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
விராட் கோலிக்கு அடுத்தபடியாக சுரேஷ் ரெய்னா 5,448 ரன்களும், 3வது இடத்தில் ஷிகர் தவான் 5,428 ரன்களும், 4வது இடத்தில் டேவிட் வார்னர் 5,384 ரன்களும், 5வது இடத்தில் ரோகித் சர்மா 5,368 ரன்களும் எடுத்துள்ளனர். இந்த பட்டியலில் டாப் 5 வரிசையில் 4 இந்திய கிரிக்கெட் வீரர்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…
கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை…
கொல்கத்தா : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…