Kieron Pollard about ishan kishan [File Image ]
Kieron Pollard : இந்த முறை இஷான் கிஷன் சரியாக விளையாடவில்லை அடுத்த முறை பயங்கரமாக விளையாடுவார் என கீரன் பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியதில் குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்த சீசனில் தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர் இஷான் கிஷன் டக் அவுட் ஆகி இருந்தார்.
இந்த நிலையில், இந்த ஒரு போட்டியை வைத்து அவரை விமர்சனம் செய்யாவேண்டாம் என்றும் அடுத்தடுத்த போட்டிகளில் அவருடைய சிறப்பான ஆட்டத்தை நீங்கள் பார்ப்பீர்கள் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான கீரன் பொல்லார்ட் போட்டி முடிந்த பிறகு பேசினார்.
இது குறித்து பேசிய கீரன் பொல்லார்ட் ” இஷான் கிஷன் இந்த போட்டியில் சரியாக விளையாடவில்லை என்று அவரை விமர்சிக்காதீங்க. மக்கள் நினைப்பது போல் இது மிகவும் எளிதான விஷயம் இல்லை. எடுத்த உடனே விருப்ப படி விளையாட முடியாது. என்னை பொறுத்தவரை அவர் டி20 வடிவங்களில் அனுபவம் வாய்ந்த வீரர். இதுவரை எங்களுடைய மும்பை அணிக்காக அதிகமாக விளையாடி இருக்கிறார்.
இஷானிடம் இருந்து பெரிய விஷயங்களை எதிர்பார்க்கிறோம்.நான் அவர் பயிற்சிகள் எடுக்கும்போது பார்த்து வருகிறேன். அவர் நல்ல பார்மில் இருக்கிறார். எனவே அடுத்த இரண்டு ஆட்டங்களில் அவரிடமிருந்து சிறப்பான ஆட்டத்தை நீங்கள் கண்டிப்பாகவே எதிர்பார்க்கலாம். அவர் அப்படிய விளையாடிய பிறகு கண்டிப்பாக நீங்கள் அவரை பாராட்டுவீர்கள்” எனவும் கீரன் பொல்லார்ட் தெரிவித்துள்ளார். மேலும், மும்பை இந்தியன்ஸ் அணி வரும் மார்ச் 27-ஆம் தேதி ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் விளையாடவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…
சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…