சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு – கைரன் பொல்லார்டு திடீர் அறிவிப்பு!

Default Image

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டரான பொல்லாடு தன்னுடைய ஓய்வு முடிவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரரான கைரன் பொல்லார்டு அறிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டரான பொல்லாடு தன்னுடைய ஓய்வு முடிவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இந்த நிலையில், 34 வயதாகும் பொல்லாடின் 15 ஆண்டுகால கிரிக்கெட் பயணம் தற்போது நிறைவு பெற்றுள்ளது. கடந்த 2007-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதன்முதலாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சர்வதேச போட்டியில் கைரன் பொல்லார்டு களமிறங்கினார். 2008-ல் பிரிட்ஜ்டவுனில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக T20 போட்டியில் களம் கண்டார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக பொல்லார்டு, 123 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 2706 ரன்கள் எடுத்துள்ளார். இதுபோன்று 101 டி20 போட்டிகளிலும் விளையாடிய அவர், 1569 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வருகிறார். 2010 முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடி வரும் பொல்லார்டு, 184 போட்டிகளில் 3350 ரன்களை அடித்துள்ளார். மேலும், 2019- ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் 61 போட்டிகளில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 25 போட்டிகளில் வெற்றியும், 31 போட்டியில் தோல்வியும் தழுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Kieron Pollard (@kieron.pollard55)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்