நாட்டை பாதுகாக்கும் ராணுவத்திற்கு உலகக்கோப்பையை பரிசளிக்க வேண்டும் கோலி பராக்
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் 30 தேதி தொடங்க உள்ளது.
அணிகள் இங்கிலாந்து நோக்கி விரையும் நேரத்தில் இந்திய அணியானது இன்று நள்ளரவு மும்பையில் இருந்து இங்கிலாந்து செல்கிறது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உலகக்கோப்பை பல்வேறு விஷயங்களை பகிர்ந்தார்.
இதில் கோலி கோப்பை குறித்து பேசுகையில் உத்வேகத்தை எங்கிருந்து வேண்டுமானாலும் பெறலாம் ஆனால் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் இந்திய ராணுவம் மிகப்பெரிய உத்வேகம்.அவர்கள் நாட்டிற்கு செய்த தியாகத்தை எதனோடும் ஒப்பிட முடியாது.
இதே உத்வேகத்துடன் நாம் சென்றால் நம்முடைய ராணுவத்திற்கு ஏதாவது செய்ய முடியும்.மேலும் இந்திய நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்குக்காக ஜெயிக்க வேண்டும்.
உலககோப்பையில் விளையாடும் போது ஒவ்வொரு வீரர்களுக்கும் தனிப்பட்ட உத்வேகம் இருக்கும் ஆனால் ஒவ்வொருவரும் மனதில் நம் ராணுவத்தை நினைத்து கொண்டால் கூடுதல் ஆற்றலுடன் கூடிய உத்வேகம் கிடைக்கும் என்று தெரிவித்தார்.