kevin pietersen AND hardik pandya [file image]
ஐபிஎல் 2024 : ஹர்திக் பாண்டியா மகிழ்ச்சியா இல்லை அப்படி மகிழ்ச்சியாக இருப்பது போல நடிக்கிறாரு என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. நேற்று சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கூட சென்னை பேட்டிங் செய்தபோது கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா தான் பந்துவீசினார். அந்த ஓவரில் எம்.எஸ்.தோனி தொடர்ச்சியாக 3 சிக்ஸர்கள் விளாசினார்.
ஹர்திக் பாண்டியா பந்து வீசிய அந்த கடைசி ஓவரில் மட்டும் 26 ரன்கள் கொடுத்தார். இதனையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணியும் 20 ரன்கள் வித்தியாசத்தில் தான் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் தான் ஹர்திக் பாண்டியா கொடுத்த அந்த ரன்கள் காரணமாக தான் மும்பை தோல்வி அடைந்துவிட்டது என பலரும் அவரை தீட்டி தீர்த்து வருகிறார்கள். இதனையடுத்து, ஹர்திக் பாண்டியாவை விமர்சிக்க வேண்டாம் அது அவருடைய விளையாட்டை பாதிக்கும் என முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய கெவின் பீட்டர்சன் ” உண்மையில் நான் என்ன நினைக்கிறன் என்றால் ஹர்திக் பாண்டியாவை விமர்சிப்பது அவருடைய விளையாட்டை பாதிக்கும் என்று தான். அவரை விளையாட்டிலிருந்து விலகி இருக்க இது ஒரு காரணமாக அமைகிறது. இப்படியெல்லாம் விமர்சனம் செய்வதால் அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது போல் நடிக்க முயற்சிக்கிறார். உண்மையில் அவர் மகிழ்ச்சியாக இல்லை. அவருடைய மனதில் பல வேதனைகள் இருக்கிறது.
நான் இந்த இடத்தில் இருப்பதன் காரணமாக அவருடைய வேதனையை என்னால் உணர முடிகிறது. ஹர்திக் பாண்டியாவுக்கு என்ன நடக்கிறது என்பதை என்னால் சொல்ல முடியும். அவருடைய ஓவரில் சிங்கம் போல் சென்னை முன்னாள் கேப்டன் சிக்ஸர்கள் விளாசியதை வைத்து பாண்டியவை விமர்சிக்கிறீர்கள் இது நியாமா? இப்படி விமர்சிப்பது அவரை புண்படுத்தும். ஏனென்றால், கிரிக்கெட் வீரர்கள் என்றாலும் அவர்களுக்கு உணர்ச்சிகள் இருக்கிறது. இப்படியெல்லாம் அவரை விமர்சனம் செய்யாதீர்கள்” எனவும் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : 18 வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. …
சென்னை : இன்று அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர்…
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டியில்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் இரண்டாவது பகுதி கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி…
சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச்…
சென்னை : வரும் 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை…