சிக்ஸர் அடித்து தன்னுடைய கார் கண்ணாடியை உடைத்த பிரபல வீரர்!
அயர்லாந்து நாட்டின் கிரிக்கெட் வீரர் கெவின் ஓ’பிரையன், கிரிக்கெட் பயிற்சியின் பொது தனது கார் கண்ணாடியை உடைத்துள்ளார்.
உலகளவில் கொரோனா பரவல் காரணமாக விளையாட்டு மைதானங்கள் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக வீட்டிலே இருக்கும் விளையாட்டு வீரர்கள், இந்த ஊரடங்கு நேரத்தில் பல வழிகளில் நேரத்தை போக்கி வருகின்றனர்.
தற்பொழுது சில நாடுகளில் மைதானங்கள் திறந்த நிலையில், அயர்லாந்து நாட்டின் கிரிக்கெட் வீரர் கெவின் ஓ’பிரையன், டப்ளினில் உள்ள பெம்பிரோக் கிரிக்கெட் கிளப்பில் பயிற்சி மேற்கொண்டார். அப்பொழுது அவர் அடித்த சிக்ஸரில் ஒன்று, பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட அவரின் கார் கண்ணாடியிலே பட்டு, கண்ணாடி உடைந்தது.
இதனை பார்த்து அதிர்ந்த அவர், பயிற்சிக்கு பின் கண்ணாடியை மாற்றுவதற்காக காரை நேராக கேரேஜுக்கு கொண்டு சென்றார். கெவின், 2011- ம் ஆண்டில் நடந்த இங்கிலாந்திற்கு எதிரான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 37 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து சாதனை படைத்து, குறைந்த பந்துகளில் அரை சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.
????: KEVIN O’BRIEN SMASHES SIX…
…and his own car window. Seriously.#IP2020 | @TestTriangle ☘️???? pic.twitter.com/dKbfDRHrjY
— Cricket Ireland (@Irelandcricket) August 27, 2020