#SRHvPBKS: நடராஜன் வெளியே, ஜாதவ் உள்ளே.. தொடர் தோல்வியில் இருந்து தப்புமா ஹைதராபாத்?

Default Image

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணியில் கேதார் ஜாதவ் இடம்பெற்றுள்ளார். 

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 14-ம் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த தொடரில் ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்த ஹைதராபாத் அணி, புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி, வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அந்தவகையில், அணியின் சில மாற்றங்களை அணியின் கேப்டன் டேவிட் வார்னர் செய்துள்ளார். அந்தவகையில், அணியின் கேன் வில்லியம்சன், கேதார் ஜாதவ் மற்றும் சித்தார்த் கவுல் அணியின் இடம்பெற்றுள்ளனர். கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைக்க சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதியது. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி அடைந்து, பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாயுப்பை இழந்துள்ளது. இதற்கு கேதார் ஜாதவின் மோசமான ஆட்டமே காரணம் என்று கூறப்படுகிறது.

இதன்காரணமாக அவர் ஐபிஎல் ஏலத்திற்கு முன் சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவரை ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்த நிலையில், இன்று அவரின் முதல் போட்டியில் களம் காண்கிறார். இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் மனிஷ் பாண்டே அடித்த பந்தை கேட்ச் பிடித்து அசத்தினார், கேதார் ஜாதவ். மேலும், ஆஸ்திரேலிய தொடரிலிருந்து நடராஜன் நீண்ட நாட்களாக விளையாடி வரும் நிலையில், அவருக்கு பதில் கலீல் அகமதுக்கு அணியின் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஹைதராபாத் அணி தெரிவித்துள்ளது.

தற்பொழுது ஹைதராபாத் அணி, 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் தீபக் ஹூடா 8(6) ரன்களுடனும், ஹென்ரிக்ஸ் 4(6) ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Earthquake in Myanmar
Academy Awards 2025
bussy anand
Tungsten madurai
mk stalin
annamalai