பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பும் இந்திய அணி வீரர்கள்… குறுக்கே வந்த கவுசிக் மழை!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி திணறி வரும் வேளையில், மழை காரணாமாக போட்டி நடைபெறாமல் தற்காலியமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பிரிஸ்பேன்: இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில், ஒரு போட்டியில் இந்தியாவும், 1 போட்டியில் ஆஸ்ரேலியா அணியும் வெற்றிபெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து, மூன்றாவது போட்டி தற்போது பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டாலும், இரண்டாம் நாளில் ஆஸ்ரேலியா அணி வீரர்கள் அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தனர்.
அதன்படி, முதல் இன்னிங்ஸில் ஆஸ்ரேலிய அணி 445 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்மித் 101, ஹெட் 152 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி சார்பில் சிறப்பாக பவுலிங் செய்த பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து, 3-வது நாள் ஆட்டமான இன்று இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது என்று தான் சொல்லவேண்டும்.
ஏனென்றால், ஸ்டார்க் வீசிய முதல் ஒவரில் 2வது பந்தில் ஜெய்ஸ்வால் 4 ரன்களுக்கு அவுட் ஆனார். பின்னர் கில் 1 ரன்னில் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி 3 ரன்களில் அவுட் ஆனார். பின்னர், களமிறங்கிய ரிஷப் பந்தும் நிதனமாக விளையாடாமல் 9 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதனால், இந்தியா 51/4 என்ற ரன்கள் எடுத்து திணறி வருகிறது. இதில், கே.எல்.ராகுல் (33*) மற்றும் ரோஹித் சர்மா (0*) அவுட் ஆகாமல் களத்தில் உள்ளனர் தற்போது, இந்தியா அணி 397 ரன்களுடன் பின்தங்கி உள்ளது. இந்த நிலையில், மழை விட்டு விட்டு பெய்வதால், ஆட்டம் நிறுத்தி மீண்டும் தொடங்கப்பட்டு வருகிறது. இப்பொது, , மழைக் காரணமாக போட்டி தாற்காலியமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் விரைவில் தொடங்கப்படுமா என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.