ruturaj gaikwad dhoni
CSK கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் தொடர் இன்று முதல் கோலாகலமாக தொடங்குகிறது. இன்றைய முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக் கொள்கிறது. இந்த போட்டியில் விளையாட இரண்டு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கிடையில் நேற்று சென்னை அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக சென்னை அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டது. இது தோனி ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே தோனி விளையாடுகிறாரா? இல்லையா? என்பது போலவும் கேள்விகள் எழும்ப தொடங்கியது.
இந்த நிலையில் சென்னை அணியின் கேப்டன் மாற்றம் குறித்தும் தோனி குறித்தும் சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் “என்னைப் பொறுத்தவரை தோனி எது செய்தாலும் அது நல்லதுக்கு தான் செய்வார் சென்னை அணிக்கு ருதுராஜ் கேப்டனாக செயல்படுவர் என்பது எங்களுக்கு தெரியவே தெரியாது.
ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள் எல்லாம் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்வில் தான் தோனி இதனை அறிவித்தார். இது எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் தோனி ஒரு முடிவை எடுக்கிறார் என்றால் அந்த முடிவை சரியானதாக இருக்கும் இரு நாங்கள் நம்புவோம். எனவே அவருடைய முடிவை நாங்கள் ஆதரித்தோம்.
அவருடைய முடிவை நாங்கள் மதிக்கவும் செய்கிறோம். தோனி என்னன்னவெல்லாம் சொல்கிறாரோ அது அனைத்தையும் நாங்கள் கண்டிப்பாக பின்பற்றுவோம் மற்றபடி இந்த முடிவு முழுக்க தோனி எடுத்த முடிவு தான். கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்ட முடிவு குறித்து ஜடேஜாவும் ஆதரித்துள்ளார்” எனவும் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…
சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்துவிட்டது. அதில் வழக்கம் போல புதிய இளம் வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுடன்…
ஜப்பான் : மியான்மர்-தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவின் அதிர்ச்சியிலிருந்து உலகம் இன்னும் மீளவில்லை. அதற்குள் ஜப்பான் ஒரு பெரிய…
சென்னை : அண்மைகாலமாக அதிமுக -பாஜக கூட்டணி குறித்த பேச்சுக்கள், அதே போல அதிமுக தலைமை மற்றும் பாஜக தலைமை…
சென்னை : தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் கனமழை சில மாவட்டங்களில் பெய்ய…