ரோஹித்துக்கு லிமிட் தெரியும்…ஆனால் கோலி அப்படி கிடையாது- கபில் தேவ் பேச்சு!
ரோஹித் சர்மா : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கும் இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லவே வேண்டாம். இருவரும் ஒற்றுமையாக பழகி வந்தாலும் இவர்களுடைய ரசிகர்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் சண்டைபோட்டு கொள்வது உண்டு. பலரும் விராட் கோலி ஃபிட்னஸை வைத்து ரோஹித் சர்மாவை விமர்சிப்பது உண்டு.
அதைப்போல, அதற்கு பதில் கோலி ஆக்ரோஷமாக நடந்துகொள்ளும் விஷயங்களை வைத்து கோலியை விமர்சிப்பதும் உண்டு. இந்நிலையில், சமீபத்தில் ஏபிபி செய்தியில் பேசிய இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” விராட் கோலி தன்னுடைய பீட்னஸில் அதிகமாக ஆர்வம் காட்டுவது உண்டு, அவர் 150 கிலோ மற்றும் 250 கிலோ எடை தூக்க முடியும் என்றால், அவரை போலவே, ரோஹித் சர்மாவும் செய்யவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. ரோஹித்துக்கு அவரது ஆட்டம் நன்றாக தெரியும். விராட் கோலி போல் ரோஹித் சர்மா இல்லவே இல்லை.
விராட் கோலி, கொண்டாடுவதும், ஆக்ரோஷமாக செய்வது போல ரோஹித் சர்மா இல்லை. ரோஹித் சர்மா ஒரு லிமிட் ஆக தான் இருப்பார். அந்த வகையில் அவரை விட சிறந்தவர் யாரும் இல்லை, ரோஹித்திடம் கூட ஒரு பேக் (சிக்ஸ்பேக்) கூட இல்லை ஆனால், அவரை போல அதிரடி சிக்ஸர்கள் யாரால் அடிக்க முடியும் என்கிற அளவுக்கு விளையாடுகிறார்.
பல பெரிய வீரர்கள் கிரிக்கெட் விளையாட வருகிறார்கள், ஆனால் அவர்கள் தங்களுக்காக விளையாட வருகிறார்கள், அவர்களுக்காக கேப்டன் பதவியை கூட செய்கிறார்கள், ஆனால் ரோஹித் அப்படி இல்லை. மற்றவர்களை விட கொஞ்சம் சிறந்தவர் என்று நான் சொல்வேன். ஏனென்றால், அவர் ஒட்டுமொத்த அணியையும் மகிழ்ச்சியாக வைத்து இருக்கிறார்” எனவும் கபில் தேவ் கூறியுள்ளார்.