போட்டிக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பது பற்றி கபில்தேவுக்கு ஒன்றும் தெரியாது. கோலி பற்றிய கருத்துக்கு ரோஹித் சர்மா பதில் கூறியுள்ளார்.
விரைவில் உலகக்கோப்பை வரவுள்ள நிலையில், இந்திய அணி வீரர்களின் தற்போதைய ஃபார்ம் பலரையும் கொஞ்சம் பதட்டமடைய தான் வைத்து வருகிறது.
இது குறித்து பேசியிருந்த, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கபில் தேவ், ‘ தற்போது ரோஹித் சர்மா, விராட் கோலி , ரிஷப் பண்ட் ஆகியோரின் ஃபார்ம் கொஞ்சம் மோசமாக இருக்கிறது. அதுவும் கோலியின் ஃபார்ம் அனைத்து ஃபார்மட்டிலும் மோசமாக இருக்கிறது. உலக கோப்பைக்கு அவர் பிளேயிங் டீமில் இல்லாமல் கூட போகலாம்’ என்பது போல கருத்து தெரிவித்து இருந்தார்.
இது குறித்து அண்மையில் பேசியிருந்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, ‘ போட்டிக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பது பற்றி கபில்தேவுக்கு ஒன்றும் தெரியாது. எங்களிடம் ஒரு யோசனை உண்டு. நாங்கள் ஒரு தேர்வு குழுவை வைத்து இருக்கிறோம். அவர்களோடு விவாதங்கள் நடைபெறும். தேர்வுக்குழு எடுக்கும் முடிவுகளை நாங்கள் ஆதரிக்கிறோம். வெளியில் நடப்பது முக்கியமல்ல.’ என பேசியிருந்தார்.
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…