கங்காரு வடிவிலான கேக்; வெட்ட மறுத்த ரஹானே.. ரசிகர்கள் நெகிழ்ச்சி!

Default Image

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை முடித்து வீடுதிரும்பிய ரஹானே, கங்காரு வடிவிலான கேக்கை வெட்ட மறுத்துவிட்டார். அவரின் இந்த செயல், ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்து வருகிறது.

ஆஸ்திரேலியா அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஒருநாள், டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதில் டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் பலரும் காயமடைந்ததை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் கோட்டையான பிரிஸ்பேன் மைதானத்தில் பார்டர் கவாஸ்கர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி, இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது.

இந்த சுற்றுப்பயணத்தை முடித்து இந்திய வீரர்கள் தாயகம் திரும்பிய நிலையில், அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், ரஹானே தங்கியிருந்த அபார்ட்மெண்டில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். ஆஸ்திரேலியா மண்ணில் கோட்டையான பிரிஸ்பேன் மைதானத்தில் இந்திய அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து, கங்காரு வடிவிலான கேக்கை தயார் செய்து, அதனை வெட்டுவதற்காக அவர்முன் வைத்தனர்.

அந்த கேக்கை ரஹானேவிடம் வெட்டுமாறு கூறினார்கள். ஆனால் ரஹானே, அதனை வெட்ட மறுத்துவிட்டார். கங்காரு, ஆஸ்திரேலிய நாட்டின் தேசிய மிருகம் என்பதால், ரஹானே இந்த கேக்கை வெட்ட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ரஹானேவின் இந்த செயல், அவரின் குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Volodymyr Zelenskyy
virat kohli centuries
MudhalvarMarundhagam
INDvPAK 2025
Pakistan vs India 2025
Chief Minister Stalin - Ministry of External Affairs