‘விடை கொடு மனமே’ ..! கேப்டன் பதவியிலிருந்து விலகினார் கேன் வில்லியம்சன்!!
நியூஸிலாந்து கிரிக்கெட்: நியூஸிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் தற்போது கேப்டன் பதவிலியிலுருந்து விலகி இருக்கிறார்.
நடைபெற்று கொண்டிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடர் போட்டியில் நியூஸிலாந்து அணி ‘C ‘ பிரிவில் இடம்பெற்றிருந்தது. அந்த பிரிவில் விளையாடிய நியூஸிலாந்து அணி 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகள், 2 தோல்விகள் என 4 புள்ளிகளை பெற்று தொடரிலிருந்து வெளியேறி இருந்தது.
மேலும், கடந்த 2011-ம் ஆண்டு முதல் கேன் வில்லியம்சன் தலைமையில் 10 ஐசிசி தொடர்களில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி இதுவரை 7 முறை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அதனை தொடர்ந்து அவருக்கு காயம் ஏற்பட்டதால் டி20 கிரிக்கெட் போட்டிகளின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தற்போது திணறி வருகிறார்.
இந்நிலையில், வரவிருக்கும் 2024-25ஆம் ஆண்டுக்கான நியூசிலாந்து அணியின் கேப்டன் பதவிக்கான மத்திய ஒப்பந்தத்தை கேன் வில்லியம்சன் தற்போது நிராகரித்துள்ளார் என நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வ X தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும், நியூசிலாந்து அணியின் டி20 மற்றும் ஒருநாள் கேப்டன்சி பதிவியிருந்தும் விலகி இருக்கிறார் கேன் வில்லியம்சன் . இது குறித்து கேன் வில்லியம்சன் பேசுகையில், “நியூசிலாந்து கிரிக்கெட்டை எதிர்காலத்தை மனதில் வைத்தே இந்த முடிவை நான் எடுத்துள்ளேன்.
நியூசிலாந்து அணிக்காக தொடர்ந்து எனது பங்களிப்பை அளிப்பதற்கும் தயாராகவுள்ளேன். நியூசிலாந்து அணிக்காக, கோடை காலத்தின் போது வெளிநாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளில் விளையாட முடிவு செய்திருக்கிறேன். அதன் காரணமாக என்னால் நியூசிலாந்து அணியின் மத்திய ஒப்பந்தத்தை ஏற்க முடியாது.
நியூசிலாந்து அணிக்காக விளையாடுவது எப்போதும் விலை மதிப்பில்லாத ஒன்றாகும். நியூசிலாந்து கிரிக்கெட்டுக்காக நான் ஏதேனும் திருப்பி கொடுக்க கடமைபட்டுள்ளேன். மேலும், கிரிக்கெட்டை தாண்டி வெளியில் எனது வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. எனது குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதும், அவர்களுடன் உடனிருப்பதுமே முக்கியமான ஒன்றாக நான் இப்போது பார்க்கிறேன்”, என்று தெரிவித்துள்ளார்.
Contract News | Kane Williamson has re-emphasised his long-term commitment to the BLACKCAPS in all three formats – despite declining a central contract for the 2024-25 year. #CricketNation https://t.co/FhDIgpoifs
— BLACKCAPS (@BLACKCAPS) June 18, 2024