ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து வார்னர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல அதிரடி வீரர்களை கொண்டுள்ள ஹைதராபாத் அணி, ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றிபெற்றுள்ளது. குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வார்னரின் ஆமைவேக விளையாட்டே தோல்விக்கு காரணம் என்றும், அவருக்கு பதில் கேன் வில்லியம்சனுக்கு கேப்டன் பொறுப்பை கொடுக்கலாம் என்று முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் கேப்டன் பொறுப்பில் இருந்து வார்னர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக நியூஸிலாந்து அணியில் அதிரடி கேப்டனான கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். வில்லியம்சன், நாளை ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டி முதல் கேப்டனாக பதவியேற்கவுள்ளார். இதனை ஹைதராபாத் அணி, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…