சிக்ஸருக்கு சென்ற பந்த அற்புதமாக தடுத்த கேன் வில்லியம்சன்.! வைரலாகும் வீடியோ.!
நேற்று நடைபெற்று சென்னை சூப்பர் கிங் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பவுண்டரியில் பீல்டிங் செய்யும் போது குஜராத் டைட்டன்ஸ் வீரர் கேன் வில்லியம்சன் காயம் அடைந்தார். ருதுராஜ் கெய்க்வாட் சிக்ஸர் அடித்த பந்தை தடுக்க முயன்றார்.
அப்போது கிட்டத்தட்ட பந்தை தடுத்து தாவி பிடித்து பவுண்டரிக்கு வெளியே தூக்கி வீசினார். அந்த பந்து சிக்ஸர் போகவில்லை ஆனால், பவுண்டரி லைனை தொட்டது. கடின முயற்சி எடுத்து பந்தை தடுத்த வில்லியம்சனுக்கு தனது வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது.
இதனால் அவர் 13-ஓவரில் போட்டியில் இருந்து வெளியேறினார். எனவே காயம் காரணமாக அவர் அடுத்ததடுத்த ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவாரா..? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
— Vaishnavi Iyer (@Vaishnaviiyer14) March 31, 2023
வலது முழங்கா பிடித்தபடி தரையில் சட்டென, அவர் விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், சிக்ஸர் சென்ற அந்த பந்தை அவர் தடுக்கும் வீடியோவை பார்த்த பலரும் அவருடைய முயற்சியை பாராட்டி வருகிறார்கள்.