டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது .இந்தபோட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 185 ரன்கள் விளாசியது அதன் பின்னர் வந்த டெல்லி அணி வெற்றியை நோக்கி வீறுநடை போட்டு சென்று கொண்டிருந்தது .ஆனால் கடைசி 2 ஓவர்களில் ஆட்டம் அப்படியே மாறியது.
அந்த அணியின் துவக்க வீரர் பிரித்திவ் ஷா 99 ரன்களுக்கு வெளியேறினார். அதன் பின்னர் வந்த வீரர்கள் குல்தீப் யாதவ் பந்தை தாக்குப் பிடிக்காமல் வெளியேறினர். கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் டெல்லி அணி 5 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது .இதற்கு காரணம் குல்தீப் யாதவ் இன் அபார பந்து வீச்சாகும்
இந்த சூப்பர் ஓவரில் முதலில் டெல்லி அணி பேட்டிங் செய்தது. டெல்லி அணிக்காக ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் களமிறங்கினர். கொல்கத்தா அணியின் சார்பில் பிரஷீத் கிருஷ்ணா பந்துவீசினார் முதல் பந்தல் ரிஷப் பண்ட் வேகமாக ஒரு ரன் அடித்தார். அதன் பின்னர் வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் ஒரு பவுண்டரி விளாசி அதற்கு அடுத்த பந்தில் தனது விக்கெட்டை இழந்தார்.
பின்னர் நான்காவது பந்தில் சிக்ஸர் அடித்து விடலாம் என தூக்கி அடித்தார் ரிஷப் பண்ட். ஆனால் அந்த பந்தில் 2 ரன்கள் மட்டுமே கிடைத்தது .அதற்கு அடுத்த இரண்டு பந்துகளில் பவுண்டரிகள் வரவில்லை. இதன் காரணமாக சூப்பர் ஓவர் முடிவில் 10 ரன் மட்டுமே டெல்லி அணி எடுத்திருந்தது.
அதற்குப் பின்னர் 10 ரன்களை எளிதாக கொல்கத்தா அணி எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பேட்டிங் பிடிக்க ரசல் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் வந்தனர். டெல்லி அணியின் சார்பில் 6 பந்துகளை வீச ககிசோ ரபாடா களமிறங்கினார்
முதல் பந்தில் ரசல் பவுண்டரி விளாச, இந்த இலக்கை எளிதாக கொல்கத்தா வென்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த பந்தில் ரன் எடுக்க முடியவில்லை. அவ்வளவு அற்புதமாக வீசினார் ரபாடா.
பின்னர் மூன்றாவது பந்தில் ரசலின் ஸ்டம்புகளை தெரிக்கவிட்டார் ரபாடா. அதன் பின்னர் ராபின் உத்தப்பா களத்துக்கு வந்தார். அடுத்த மூன்று பந்துகளிலும் ஒவ்வொரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக 6 பந்துகளில் 7 டன் மட்டுமே விட்டுக்கொடுத்து வெற்றி பெறவைத்தார் ரபாடா. ஐபிஎல் தொடரின் சிறந்த போட்டியாக இது அமைந்தது
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…