ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.முதல் ஒருநாள் போட்டியில் முதலில் இறங்கிய இந்திய அணி 255 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் போட்டியில் இந்திய அணியில் களமிறங்கிய ரிஷப் பண்ட் 33 பந்துகளில் 28 ரன்கள் அடித்தார். ரிஷப் பண்ட் களமிறங்கி விளையாடும்போது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பட் கம்மின்ஸ் வீசிய பந்து ரிஷப் பண்ட் ஹெல்மெட்டில் அடித்தது. இதனால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.இதனால் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்யும்போது ரிஷப் பண்ட் கீப்பிங் செய்யவில்லை, அவருக்கு பதிலாக கே.எல் ராகுல் கீப்பிங் செய்தார். இந்தியா -ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு போட்டி இன்று ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.தற்போது காயம் சரியாகாத நிலையில் இன்று நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில் ரிஷப் பண்ட் விலகி உள்ளார்.இவருக்கு பதிலாக ஆந்திராவை சேர்ந்த கே.எஸ்.பரத் சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…