#Justnow:இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா உறுதி – பிசிசிஐ அறிவிப்பு!

Default Image

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி ஒரு டெஸ்ட்,3 ஒருநாள்,3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது.இந்நிலையில்,இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு நேற்று நடத்தப்பட்ட ரேபிட் ஆன்டிஜென் சோதனையை (RAT) தொடர்ந்து,அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும்,இது தொடர்பாக பிசிசிஐ கூறுகையில்:”டீம்இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு நேற்று (சனிக்கிழமை) நடத்தப்பட்ட ரேபிட் ஆன்டிஜென் சோதனை (RAT) ஐத் தொடர்ந்து,கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தற்போது அவர் அணி ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு BCCI மருத்துவக் குழுவின் பராமரிப்பில் உள்ளார்.” என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக,விராட் கோலி தலைமையிலான இந்தியா அணி கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 2-1 என முன்னிலை பெற்றிருந்தது.ஆனால் இந்திய முகாமில் கொரோனா வெடித்ததால் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் ரத்து செய்யப்பட்டது.இதனால்,BCCI மற்றும் ECB ஆகியவை இந்த ஆண்டு மீதமுள்ள டெஸ்ட் போட்டியை நடத்த முடிவு செய்தன.

அதன்படி,வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்துக்கு எதிரான 5 வது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது.இதற்கு முன்னதாக,4 நாள் சுற்றுப்பயணத்தில் லெய்செஸ்டர்ஷைர் அணியுடன் விளையாடும் அணியில் ரோஹித் சர்மா இடம்பெற்றிருந்தார்.இந்நிலையில்,தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.எனினும்,இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக சரியான நேரத்தில் குணமடைந்தால்,அது இந்திய அணியின் கேப்டனாக ரோஹித்தின் முதல் டெஸ்ட் போட்டியாக இருக்கும். சமீபத்தில்,ரோஹித் சர்மா இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் தனது 15 ஆண்டுகளை நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்