சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருத்துராஜ் இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் அதிரடியாக விளையாடி வருகிறார் என்றே கூறலாம். முதல் போட்டியில் 92 ரன்களும், இரண்டாவது போட்டியில் 57 ரன்கள் எடுத்தும் இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் அதிகம் ரன்கள் எடுத்த வீரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
இந்நிலையில், நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய ருத்துராஜ் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் எடுத்து அரைசதம் விளாசினார். லக்னோ அணியின் பந்துவீச்சாளர் கிருஷ்ணப்ப கௌதம் வீசிய 5 -வது ஓவரில் ருத்துராஜ் சிக்ஸர் ஒன்றை விளாசினார்.
சிக்ஸருக்கு சென்றுகொண்டிருந்த அந்த பந்து வர் அடித்த ஒரு சிக்சர் பவுண்டரி எல்லை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் காரில் சென்று பந்து பட்டது. இதில் அந்த கார் சற்று சேதாரம் அடைந்தது. இதற்கான வீடியோகளும், புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் காரை பதம் பாத்துட்டீங்களே பாஸ் என நகைச்சுவைகயாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும் இந்த கார் ஐபிஎல்-ல் சிறப்பாக விளையாடும் சிறந்த வீரருக்கு பரிசாக வழங்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…