ஜஸ்ட் மிஸ்! அஸ்வினுக்கு பயத்தை காட்டிய வீரர்…வைரலாகும் வீடியோ!!
ரவிச்சந்திரன் அஷ்வின் : இந்தியா கிரிக்கெட் அணியின் மூத்த ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் தற்போது நடந்து வரும் TNPL கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை இந்தியாவுக்காக பல போட்டிகள் விளையாடி இருக்கும் அஸ்வினை உலகம் முழுவதும் தெரிய வைத்த விஷயங்களில் ஒன்று, ‘மன்கட்’ என்று சொல்லலாம்.
இந்த மன்கட் அஸ்வின் செய்து தான் நாம் பார்த்திருக்கிறோம். அப்படியான அஸ்வினுக்கே சற்று பயத்தை காட்டும் வகையில் ஒரு வீரர் மன்கட் செய்ய முயன்றுள்ளார். TNPL கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் திண்டுக்கல் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த அணியின் கேப்டன் அஸ்வின் ஸ்ட்ரைக்கர் என்டில் நின்று கொண்டு இருந்தார்.
அப்போது பந்து வீச வந்த நெல்லை அணியின் சுழற்பந்துவீச்சாளர் மோகன் பிரசாத் பந்து வீசுவதற்கு சென்று அஸ்வின் க்ரீஸ் விட்டு வெளியே சென்றபோது மோகன் பிரசாத் கவனித்து மன்கட் செய்ய முயன்றார். இருப்பினும், இதனை கவனித்த அஸ்வின் க்ரீஸ்குள் அவுட் ஆகாமல் வந்துவிட்டார். ஆனால், வேகமாக மோகன் பிரசாத் பந்தை ஸ்டிக்கில் அடித்திருந்தால் நிச்சியமாக அஸ்வின் அவுட் ஆகி இருப்பார்.
Ash அண்ணா be like : நீ படிச்ச School-ல நா Headmaster டா! ????????
???? தொடர்ந்து காணுங்கள் TNPL | Dindigul Dragons vs Nellai Royal Kings | Star Sports தமிழில் மட்டும்#TNPLOnStar #TNPL2024 #NammaOoruNammaGethu @TNPremierLeague pic.twitter.com/fI97alqNJl
— Star Sports Tamil (@StarSportsTamil) July 28, 2024
இருப்பினும், அதனை மோகன் பிரசாத் செய்யாமல் இனிமேல் க்ரீஸ் விட்டு வெளியே வர கூடாது என்பது போல எச்சரிக்கும் வகையில் சென்றார். க்ரீஸ் விட்டு வெளிய வந்துவிட்டு நொடியில் பயத்தில் பேட்டை அஷ்வின் உள்ளே வைத்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் ஜஸ்ட் மிஸ் எனவும், மேலும் சிலர், ‘நீ படிச்ச ஸ்கூலில் அஸ்வின் ஹெட் மாஸ்டர்’ எனவும் கூறிவருகிறார்கள். நேற்று திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு இடையே நடந்த போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.