கொம்பன் இறங்கிட்டான்.., ராஜஸ்தானுக்கு வானவேடிக்கை காட்ட தொடங்கிய ஹைதிராபாத்!
கடந்த சீசனை போலவே இந்த சீசனிலும் மிரட்டலான தொடக்கத்தை அமைத்து ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஹைதிராபாத் அணி விளையாடி வருகிறது.

ஹைதிராபாத் : கடந்த 2024 சீசனில், சன்ரைசர்ஸ் ஹைதிராபாத் அணி தனது அதிரடியான பேட்டிங்கால் எதிரணி பவுலர்களை கதிகலங்க செய்தது. SRH-ன் தொடக்க ஆட்டக்காரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா எதிரணி பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இதன் விளைவாக, SRH ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர்களை அடுத்தடுத்து பதிவு செய்தது.
2024 ஐபிஎல்-ல் பெங்களூரு அணிக்கு எதிராக 20 ஓவரில் 263 ரன்களும்,அடுத்து மும்பை அணிக்கு எதிராக 277 ரன்களையும் விளாசி எதிரணியை பேட்டிங்கால் மிரட்டினர். மும்பை அணிக்கு எதிராக அடித்த 277 ரன்களே ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்ச மொத்த ஸ்கோர் ஆகும். குறிப்பாக, ஹைதராபாத் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான சிறிய எல்லைகள் கொண்டது என்பதால், அவர்களுக்கு இது கூடுதல் பலமாக அமைந்தது.
கடந்த ஆண்டு போலவே, SRH அணி இந்த சீசனிலும் அதே அதிரடி பாணியை தொடர வாய்ப்புள்ளது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா மற்றும் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆகியோரின் தலைமையில் அவர்கள் மீண்டும் ரன் மழை பொழியலாம்.
இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஹைதிராபாத் அணி எதிர்கொண்டு விளையாடி வருகிறது. கடந்த சீசனை போல ரன் மழை பொழியுமா அல்லது, ராஜஸ்தான் அணி தங்கள் பந்துவீச்சால் ஹைதிராபாத்தை கட்டுப்படுத்துமா என்பதை அடுத்தடுத்த ஓவர்களில் தான் பார்க்க வேண்டும். இன்றைய போட்டியானது
RR அணியில் யுஸ்வேந்திர சாஹல், டிரெண்ட் போல்ட் போன்ற அனுபவமிக்க பந்துவீச்சாளர்கள் உள்ளனர், அவர்கள் SRH-ன் அதிரடியை கட்டுப்படுத்த முயற்சிக்கலாம். இன்றைய போட்டியானது ஹைதிராபாத் ராஜீவ்காந்தி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
RR அணியின் பேட்டிங் லைன்அப்பில் சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் ஆகியோர் உள்ளனர். இவர்கள் பெரிய ஸ்கோரை எட்டினால், போட்டி மிகவும் பரபரப்பாக மாறலாம். இருப்பினும், கடந்த சீசனை போல SRH அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்ய இன்றைய போட்டி ஒரு தொடக்கமாக அமையுமா என்பது மைதான நிலைமைகள், அணியின் உத்தி மற்றும் பந்துவீச்சு தரத்தை பொறுத்தே அமையும்.
தற்போது 5.3 ஓவரில் 87 ரன்கள் விளாசியுள்ளது. டிராவில் ஹெட் 42 ரன்களும், இஷான் கிஷான் 20 ரன்களும் விளாசி உள்ளனர். 6 ஓவரில் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் பறக்க விட்டுள்ளது ஹைதிராபாத்.