5 ஓவரில் 3 மெய்டன் 5 விக்கெட்டை வீழ்த்திய ஜோஷ் ஹேசில்வுட்.!

Default Image

டெஸ்டில் மிக குறைந்த ரன்னில் சுருண்ட இந்தியா அணி 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள ஆஸ்திரேலியா அணி. ஜோஷ் ஹேசில்வுட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 

அடிலெய்டு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்சில் இந்திய அணி 244 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4, பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4, உமேஷ் யாதவ் 3, பும்ரா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை விட 53 ரன்கள் முன்னிலையுடன் நேற்று 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2வது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 6 ஓவர் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 9 ரன்கள் எடுத்த நிலையில், 3வது நாளான இன்று இந்திய அணி ஆட்டத்தை தொடங்கியது. ஆஸ்திரேலிய பவுலர்களை சமாளிக்கமுடியாமல் இந்திய அணி வீரர்கள் 36 ரன்னில் 9 விக்கெட்டை இழந்தனர்.

இதனால் இந்திய அணி 9 விக்கெட்டை இழந்து 36 ரன்கள் எடுத்து 89 ரன்கள் முன்னிலையில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி பொறுத்தளவில் ஜோஷ் ஹேசில்வுட் சிறப்பாக பந்துவீசி 5 ஓவரில் 3 மெய்டன் ஓவர் போட்டு 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதேபோன்று பாட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தற்போது 90 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய களமிறங்கி 15 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Coverage 1
rahul gandhi helicopter
appam (1) (1) (1)
amaran ott release date
Actor Jayam Ravi - Aarti
A Man Died in Guindy Hospital
Mike Tyson