#IPL2022: 70 ரன்கள்.. ஆரஞ்சு கேப்பை தன்வசப்படுத்திய பட்லர்!
ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் ஜோஸ் பட்லர் 70 ரன்கள் அடித்து அசத்திய நிலையில், அதிக ரன்கள் அடித்தோர் பட்டியலில் முதலிடம் பிடித்து, ஆரஞ்சு கேப்-ஐ பெற்றார்.
15-வது ஐபிஎல் தொடர் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அதிக ரன்களை குவித்த வீரருக்கு ஆரஞ்சு கேப் வழங்குவது வழக்கம். அதேபோல அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரருக்கு பர்பிள் கேப்-ஐ வழங்கி, அவர்களை கவுரவிற்பார்கள். அந்தவகையில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதினார்கள்.
இந்த போட்டியில் பெங்களூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற, ராஜஸ்தான் அணியின் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் 47 பந்துகளில் 70 ரன்கள் அடித்து அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் முதலிடம் பெற்றார். இதன்காரணமாக அவருக்கு ஆரஞ்சு கேப் வழங்கி கவுரவிக்கப்பட்டது. அவர் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 135 ரன்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.