அவரும் மனுஷன் தான்.. விமர்சனம் செய்ய வேண்டாம்.! விராட் கோலிக்கு ஆதரவாக பேசிய இங்கிலாந்து கேப்டன்.!
விராட் கோலியும் சாதாரண மனிதர் தான். அவருக்கும் சில போட்டிகள் சறுக்கலை தரும். – இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரும், முன்னாள் கேப்டனுமாகிய விராட் கோலி தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ரன்கள் குவிக்க திணறி வருகிறார்.
இதனால் இவரது ஃபார்ம் குறித்து, பல்வேறு கேள்விகள், விமர்சனங்கள் எழுந்து வருகிறது. முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் கூட விராட் கோலியின் ஃபார்மிற்கு வரவில்லை என்றால், டி20 உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்காமல் இருந்துவிடும். என கூறியிருந்தார்.
இந்த நிலையில் தான், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் கூறுகையில், ‘ விராட் கோலியும் சாதாரண மனிதர் தான். அவருக்கும் சில போட்டிகள் சறுக்கலை தரும். கோலி மிக சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் அதனால் தான் அவர் இன்னும் அணியில் இடம் பெற்று இருக்கிறார். ‘ என கூறியுள்ளார் ஜோஸ் பட்லர்.