‘வெற்றியை கொண்டாட எங்களுடன் சேருங்கள்’- ஜெய்ஷா டிவீட் ..!

பிசிசிஐ : இந்த ஆண்டில் நடைபெற்று வந்த மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிறைந்த தொடர் தான் 20 ஓவர் உலகக்கோப்பை தொடராகும். இந்த தொடரில் இந்திய அணி மிக பிரமாதமாக விளையாடி ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் உலகக்கோப்பையை திரில்லாக வெற்றி பெற்றனர். இந்த தொடரில் விளையாடிய இந்திய அணியின் ஒவ்வொரு வீரர்களும் தனிப்பட்ட முறையில் சிறப்பாக விளையாடினார்கள்.
இதன் காரணமாகவே இந்திய அணி இந்த தொடரை இந்திய அணி போராடி வென்றுள்ளனர். இதன் மூலம் 17 வருட கனவான டி20 கோப்பையும், 11 வருட கனவான ஐசிசி கோப்பையும் நிறைவேறியுள்ளது என்றே கூறலாம். இந்நிலையில், அமெரிக்காவில் விளையாடி வெற்றி பெற்ற இந்திய அணி மாலை தாயகம் திரும்ப உள்ளனர்.
இதனால் இந்தியா அணிக்கு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் பிரமாண்ட வரவேற்புடன் பாராட்டு விழா நடைபெற உள்ளது என தகவல்கள் வந்தது. அதனை தற்போது பிசிசிஐயின் செயலாளரான ஜெய்ஷா க்ஸ் தளத்தில் வெளியிட்ட ட்வீட் மூலம் உறுதி செய்துள்ளார். அவர் அந்த பதிவில், “இந்தியா அணியின் உலகக் கோப்பை வெற்றியை கௌரவிக்கும் வகையில் வெற்றி ஊர்வலத்தில் எங்களுடன் சேருங்கள்! ஜூலை 4 ஆம் தேதி மாலை 5:00 மணி முதல் மெரைன் டிரைவ் மற்றும் வான்கடே மைதானத்திற்கு வாருங்கள்.
???????????? Join us for the Victory Parade honouring Team India’s World Cup win! Head to Marine Drive and Wankhede Stadium on July 4th from 5:00 pm onwards to celebrate with us! Save the date! #TeamIndia #Champions @BCCI @IPL pic.twitter.com/pxJoI8mRST
— Jay Shah (@JayShah) July 3, 2024
மேலும், எங்களுடன் கொண்டாடுங்கள். இந்த நாளை மறக்காமல் குறித்து வைத்து கொள்ளுங்கள்” , என பதிவிட்டிருந்தார். தற்போது, இந்த நிகழ்வுக்கான தீவிர வேலையில் பிசிசிஐ இருந்து வருகிறது. மேலும், இந்திய அணியின் ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் இந்திய அணியின் வீரர்களை வரவேற்பதில் ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025