நடப்பு உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணி லீக் போட்டிகளில் மோசமாக விளையாடியதால் அரையிறுதி தகுதி பெறாமல் வெளியேறினர். இங்கிலாந்து அணி நேற்றைய தங்களின் கடைசி லீக் போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த லீக் போட்டிகளில் ஜோ ரூட் ரன்களை எடுக்க முடியாமல் திணறி வந்தார்.
இருப்பினும், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஜோ ரூட் நன்றாக விளையாடினார். மேலும், நேற்றைய போட்டியில் அவர் தனது அணிக்காக அதிக ரன்கள் எடுத்தார். நேற்று மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்த அவர் மொத்தம் 72 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஜோ ரூட் ஒரு சிறப்பான சாதனையையும் படைத்தார்.
உலகக்கோப்பையில் 1000 ரன்களுக்கு மேல் அடித்த முதல் வீரர்:
32 வயதான ஜோ ரூட் உலகக்கோப்பையில் 1000 ரன்களுக்கு மேல் அடித்த முதல் இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார். ரூட்டுக்குப் பிறகு இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரஹாம் கூச் என்ற பெயர் உள்ளது. கூச் 1979 முதல் 1992 வரை நடைபெற்ற உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணிக்காக மொத்தம் 21 போட்டிகளில் விளையாடினார். 21 இன்னிங்ஸில் மொத்தம் 897 ரன்கள் குவித்தார். அதில் ஒரு சதம் மற்றும் 8 அரை சதங்கள் அடித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு பிறகு ரூட் 1034 ரன்கள் குவித்துள்ளார். உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்காக ரூட் மொத்தம் 26 போட்டிகளில் விளையாடியுள்ளார்.இதில் மொத்தம் 1034 ரன்கள் எடுத்துள்ளார். உலகக் கோப்பையில் ரூட் தனது பெயரில் மூன்று சதங்கள் மற்றும் 6 அரை சதங்கள் அடித்துள்ளார்.
உலகக்கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த முதல் 5 பேட்ஸ்மேன்கள்:
2278 ரன்கள் – 44 இன்னிங்ஸ் – சச்சின் டெண்டுல்கர் – இந்தியா
1743 ரன்கள் – 42 இன்னிங்ஸ் – ரிக்கி பாண்டிங் – ஆஸ்திரேலியா
1573 ரன்கள் – 34 இன்னிங்ஸ் – விராட் கோலி – இந்தியா
1532 ரன்கள் – 35 இன்னிங்ஸ் – குமார் சங்கக்கார – இலங்கை
1491 ரன்கள் – 27 இன்னிங்ஸ் – டேவிட் வார்னர் – ஆஸ்திரேலியா
ஜோ ரூட்டின் சர்வதேச கிரிக்கெட்:
ஜோ ரூட் இதுவரை இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 247 இன்னிங்ஸ்களில் 11416 ரன்களையும், ஒருநாள் போட்டிகளில் 160 இன்னிங்ஸில் 6522 ரன்களையும், டி20யில் 30 இன்னிங்ஸில் 893 ரன்களையும் எடுத்துள்ளார்.
2023 உலகக்கோப்பையில் அனைத்து அணிகளுக்கும் எதிராக ஜோ ரூட் அடித்த ரன்கள்:
77 ரன்கள் – நியூசிலாந்துக்கு எதிராக
82 ரன்கள் – வங்கதேசத்துக்கு எதிராக
11 ரன்கள் – ஆப்கானிஸ்தானுக்கு எதிராக
02 ரன்கள் – தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக
03 ரன்கள் – இலங்கைக்கு எதிராக
00 ரன்கள் – இந்தியா எதிராக
13 ரன்கள் – ஆஸ்திரேலியாவுக்கு எதிராக
28 ரன்கள் – நெதர்லாந்துக்கு எதிராக
60 ரன்கள் – பாகிஸ்தான் எதிராக
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…