உலகக்கோப்பையில் இங்கிலாந்து வீரர்களில் ஜோ ரூட் முதலிடம்
நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணி , இலங்கை அணி மோதிது. இப்போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இறுதியாக இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 232 ரன்களை எடுத்தனர். பிறகு இறங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டை இழந்து 212 ரன்கள் எடுத்து 20 ரன் வித்தியாசத்தில்தோல்வியை தழுவியது.
நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து அணியை சார்ந்த ஜோ ரூட் நிதனமாக விளையாடி 89 பந்தில் 57 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியை சார்ந்த வீரர்களில் 50 ரன்னிற்கு மேல் அதிக போட்டிகளில் அடித்த வீரர்களில் ஜோ ரூட் முதலிடத்தில் உள்ளார்.
ஜோ ரூட் இதுவரை விளையாடிய உலகக்கோப்பையில் 5 முறை 50 ரன்னிற்கு மேல் அடித்து முதலிடத்தில் உள்ளார். மேலும் நேற்றைய போட்டியில் 50 ரன்னிற்கு மேல் அடித்ததன் மூலம் இந்த சாதனையை படைத்தார்.
Root – 5 (2019)*
Pietersen – 5 (2007)
Trott – 5 (2011)