உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ஜோ ரூட் முதலிடம் !

நேற்றை போட்டியில் இங்கிலாந்து அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோதியது.இப்போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற்றது . இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 305 ரன்கள் எடுத்தனர்.பின்னர் இறங்கிய நியூஸிலாந்து அணி 45 ஒவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 186 ரன்கள் எடுத்து 119 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் மூன்றாவது வீரராக ஜோ ரூட் களமிறங்கி நிதானமாக விளையாடிய 25 பந்தில் 24 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அதில் ஒரு பவுண்டரி அடித்தார்.
இந்நிலையில் இதுவரை நடந்த உலகக்கோப்பையில் இங்கிலாந்து வீரர்களில் அதிக ரன்கள் அடித்த வீரராக தற்போது ஜோ ரூட் உள்ளார்.உலகக்கோப்பையில் இங்கிலாந்து வீரர் கிரஹாம் கூச் 471 ரன்கள் அடித்ததே அதிகபட்ச ரன்னாக இருந்தது.
ஆனால் நடப்பு உலகக்கோப்பையில் ஜோ ரூட் 483 ரன்கள் அடித்து முதல் இடத்தை பிடித்து உள்ளார்.
483 * – ஜோ ரூட், 2019
471 – கிரஹாம் கூச், 1987
444 – கெவின் பீட்டர்சன், 2007
424 * – ஜானி பேர்ஸ்டோவ், 2019
422 – ஜொனாதன் ட்ராட், 2011
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025