IndvsEng: சச்சின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்!!
இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரில் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்குத் தள்ளி ரூட் சாதனை ஒன்றை படைத்து அசத்தியுள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து கிரிக்கெட் ஜோ ரூட் 60 பந்துகளில் ஒரு பவுண்டரி அடித்து 29 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், ஜோ ரூட் தற்போது இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2,555 ரன்கள் எடுத்துள்ளார்.
IndvsEng: இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்!
இதனையடுத்து, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகளில் அதிகம் ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இங்கிலாந்து அணிக்கு எதிராக 32 போட்டிகளில் விளையாடி 2,535 ரன்கள் எடுத்து இருந்தார்.
அதனை தொடர்ந்து ஜோ ரூட் இந்தியாவுக்கு எதிராக 48 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,555 ரன்கள் அடித்தார். இதுவரை ஜோ ரூட் இந்தியாவுக்கு எதிராக டெஸ்டில் 9 சதங்கள் மற்றும் 10 அரை சதங்கள் அடித்துள்ளார். மேலும், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.