இந்தியாவுக்கு ஆடியபோது கிடைக்கல ஆனா ஆர்சிபிகாக கிடைச்சது! ஜிதேஷ் சர்மா எமோஷனல்!
பெங்களூர் ரசிகர்கள் கொடுத்த ஆதரவு மறக்கவே முடியாது என ஜிதேஷ் சர்மா பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

பெங்களூர் : ஐபிஎல் தொடரில் ஒரு முறை கோப்பை வெல்லவில்லை என்றாலும் கூட ஆர்சிபிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். எனவே, அணி சார்பாக விளையாடும் வீரர்கள் எங்கு சென்றாலும் பெங்களூர் ரசிகர்கள் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பை அளித்துவிடுவார்கள். அப்படி தான் இந்த ஆண்டு பெங்களூர் அணிக்காக விளையாடும் ஜிதேஷ் ஷர்மாவுக்கு வரவேற்பு கொடுத்துள்ளார்கள்.
இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது பெங்களூர் ரசிகர்கள் கொடுத்த உற்சாக வரவேற்பு குறித்து எமோஷனலாக சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார். இது குறித்து பேசிய அவர் ” என்னை இந்த ஆண்டு பெங்களூர் அணி ஐபிஎல் ஏலத்தில் எடுத்ததற்கு பிறகு நான் சையத் முஷ்டாக் அலி டிராபி (SMAT) போட்டியில் ஆடிக்கொண்டு இருந்தேன். போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, மைதானத்தில் கூடியிருந்த மக்கள் ‘ஜிதேஷ், ஜிதேஷ்’ என்றும், ‘ஆர்.சி.பி, ஆர்.சி.பி’ (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) என்றும் உற்சாகமாக கூச்சலிட்டனர்.
அதனைக்கேட்டவுடன் என்னுடைய உடல் புல்லரிக்க தொடங்கிவிட்டது. அதுவரை பெங்களூர் அணி என்றால் சின்ன அணி என்பது போல தான் நினைத்துக்கொண்டு இருந்தார். பிறகு ரசிகர்கள் ‘ஆர்.சி.பி, ஆர்.சி.பி என கோஷமிட்டதை பார்த்து தான் நான் ஒரு சிறிய அணியால் தேர்ந்தெடுக்கப்படவில்லை, மாறாக ஒரு பெரிய அணியின் பகுதியாக இருக்கிறேன் என்று புரிய வந்தது.
அது மட்டுமில்லை, போட்டி முடிந்த பிறகு, சுமார் 150 பேர் எனது ஆட்டோகிராஃப் வாங்குவதற்காக காத்திருந்தனர். இதற்கு முன்பு நான் இந்திய அணிக்காகவும் விளையாடியிருக்கிறேன், ஆனால் அப்போது வெறும் 2-3 பேர் மட்டுமே எனது ஆட்டோகிராஃப் கேட்டு வந்தனர். பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்தபிறகு என்னுடைய பெயர் இன்னுமே வெளியே தெரிந்து அதிகமானோர் ஆட்டோகிராஃப் கேட்டு வந்தது எனக்கு ஒரு புதுவிதமான அனுபவமாக இருந்தது” எனவும் சற்று எமோஷனலுடன் ஜிதேஷ் சர்மா பேசியுள்ளார்.
மேலும், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மேலும், 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணி ஜிதேஷ் சர்மாவை ரூ.11 கோடிக்கு வாங்கியது. அவரது ஆக்ரோஷமான பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் திறமை அருமையாக இருப்பதால் அவருக்கும் தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகி வருகிறது.