ஐபிஎல் தொடரை இனி இலவசமாக பார்க்க முடியாது! செக் வைத்த ஜியோ ஹாட்ஸ்டார்

ஐபிஎல் தொடரை இனி இலவசமாக பார்க்க முடியாது. ஜியோஹாட்ஸ்டாரில் குறைந்தபட்சமாக 3 மாதங்களுக்கு ரூ.149 ரீசார்ஜ் செய்து சேவையை பயன்படுத்த முடியும்.

ipl 2025

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் என்றாலே அதற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. எனவே, ஐபிஎல் போட்டிகள் தொடங்கியவுடன் பலரும் மாதம் சந்தா கட்டி டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்த்தனர். கடந்த 2015-ஆம் ஆண்டிலிருந்து ஹாட்ஸ்டார் நிறுவனம் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தை பெற்று ஒளிபரப்பு செய்து வந்தது.

ஆரம்பத்தில் ஹாட்ஸ்டார் இலவசமாக வழங்கி வந்த நிலையில், அதன்பிறகு கடந்த 2018-ஆம் ஆண்டு ரூ16,347 கோடிக்கு IPL ஒளிபரப்பு உரிமையைபெற்றபோது, முழுமையாக சந்தா கட்டணத்துடன் மட்டுமே பார்க்க முடியும் வசதி கொண்டுவரப்பட்டது. அதன்பிறகு ஜியோ நிறுவனம் ஜியோ சினிமா என்கிற ஓடிடி தளத்தை களமிறக்கி ஹாட்ஸ்டாரை பின்னுக்கு தள்ளும் வகையில், 2023 ஐபிஎல் சீசன் முதல் ஐபிஎல் போட்டிகளை இலவசமாக ஜியோ சினிமாவில் பார்த்து கொள்ளலாம் என அறிவித்தது.

எனவே, ஐபிஎல் விரும்பிகள் பலரும் வேகமாக ஜியோ சினிமா ஓடிடி தளத்தை பதிவிறக்கம் செய்து ஐபிஎல் போட்டிகளை இலவசமாக பார்த்துக்கொண்டு வந்தனர். ஐபிஎல் போட்டிகளால் தங்களுடைய செயலியை மக்கள் பதிவிறக்கம் செய்கிறார்கள் என்ற காரணத்தால் ஜியோ சினிமா அதற்கு அடுத்த ஆண்டான நடந்து முடிந்த (2024) ஐபிஎல் தொடரையும் இலவசமாக பார்க்கும் வசதியை அப்படியே கொடுத்தது.

அதைப்போலவே, இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியையும் அப்படி இலவசமாக பார்க்கும் வசதியை கொடுக்கும் என பலரும் நினைத்த நிலையில், தலையில் குண்டை போடும் விதமாக இலவசமாக பார்க்க முடியாது என்கிற விஷயம் தெரிய வந்து இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே, ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமா இரண்டு ஒன்றாக இணைந்து ஜியோ ஹாட்ஸ்டார் என உருவாகியுள்ளது.

எனவே, இந்த ஓடிடி தளத்தில் தான் ஐபிஎல் போட்டிகள் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்ற காரணத்தால் சந்தா செலுத்தி தான் ஐபிஎல் போட்டிகளை பார்க்க முடியும் என்கிற சூழ்நிலை நிலவியுள்ளது. ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் மூன்று மாத திட்டம் மொபைல் பயனர்களுக்கு, ரூ.149 வருகிறது. அதைப்போல, ஒரு ஆண்டு திட்டம் மொபைல் பயனர்களுக்கு, ரூ.499க்கு வருகிறது. பிரிமியம் திட்டம் பொறுத்தவரையில், டிவி, லேப்டாப், மொபைல் போன்ற இரண்டு சாதனங்களில் பார்க்க, ஒரு ஆண்டுக்கு ரூ.899க்கு வருகிறது.

அதைப்போல, பிரிமியம் திட்டம் வாங்குபவர்கள் 1080p தரத்தில் ஒளிபரப்பை பார்த்துக்கொள்ளலாம். இப்படியான அதிரடியான சந்தா கண்டனங்கள் கொண்டு வரப்பட்டுள்ள காரணத்தால் ஐபிஎல் போட்டிகளை இனிமேல் இலவசமாக பார்க்க முடியாத சூழ்நிலையும் நிலவியுள்ளது. இதனால் ஐபிஎல் விரும்பி பார்க்கும் பலரும் வேதனையில் உள்ளார்கள். மேலும். இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கி மே மாதம் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்