கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்க இருக்கும் ஜிம்மி நீசம் ..!
நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான ஜிம்மி நீசம் தற்போது பங்களாதேஸ் பிரீமியர் லீக் (BPL) தொடரில் ரங்பூர் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நியூஸிலாந்து அணிக்காக நிறைய போட்டிகளில் வெற்றியை தேடி தந்தவர் ஜிம்மி நீசம் ஆவார்.
#INDvENG : 2-ம் நாள் முடிவில் 238 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து..!
கடந்த வாரம் வெள்ளிகிழமை அன்று வங்காளதேசத்தில் உள்ள ஜாஹுர் அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் பயிற்சியில் ஈடுப்பட்டு கொண்டிருந்த போது ஜிம்மி நீசம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்,” நான் எனது எதிர்கால கிரிக்கெட்டிற்கு இன்னும் திட்டம் இடவில்லை. மேலும், இந்த ஆண்டு தொடங்கவிருக்கும் டி20 உலகக்கோப்பையில் நிச்சயம் நான் பங்கேற்று எனது பங்களிப்பை நியூஸிலாந்து அணிக்காக கொடுப்பேன்.
அது தான் எனது தற்போதைய இலக்கு. இந்த டி20 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த பிறகே நான் தொடர்ந்து நியூஸிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதா இல்லை, இதே போல டி20 போட்டிகளிலே தொடர்ந்து விளையாடுவதா என்று ஆலோசனை செய்ய முடிவெடுத்துள்ளேன். மேலும், ஒரு ஆல்-ரவுண்டராக 35-36 வயது வரை விளையாடுவதை நான் பெருமையாக நினைக்கிறேன்.
அதனால் என்னால் முடிந்த வரை எனது உடலை அதற்கு தகுந்தது போல் ஃபிட்டாக வைத்துக்கொள்ள முயற்சி செய்வேன். என்னால் முடிந்த வரை விளையாடும் போட்டிகளில் காயங்கள் ஏற்படாதவாறு பார்த்து கொள்வேன். நான் எந்த ஒரு அணியில் இடம் பெற்றாலும் அந்த அணியின் ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும் நான் பக்க பலமாக இருந்து எனது பங்களிப்பை அளிப்பேன்.” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.