ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) கூட்டத்தில் 2024-ம் ஆண்டு வரை ஏசிசி தலைவராக ஜெய் ஷா நீடிப்பார் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருக்கும் ஜெய் ஷாவின் பதவிக்காலம் 2024 வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்று ஏசிசி உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக முடிவு செய்துள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ட்வீட் செய்து கூறப்பட்டுள்ளது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் ஐந்து வாரியங்கள் நிரந்தர உறுப்பினர்கள் இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை அடங்கும். இவை தவிர, நேபாளம், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பூட்டான், ஹாங்காங், தாய்லாந்து, சீனா, பஹ்ரைன் உள்ளிட்ட பல நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் இந்த கவுன்சிலில் அங்கம் வகிக்கின்றன. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் )பிசிசிஐ) செயலாளராகவும் ஜெய் ஷா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்து.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…