மைதான ஊழியர்களுக்கு பரிசுத்தொகை அறிவித்த ஜெய்ஷா ! எவ்வளவு தெரியுமா?

Jaisha, BCCI Secretary

ஜெய்ஷா : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மைதானத்தில் பணிப்புரிந்த ஊழியர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளதாக ஜெய்ஷா தற்போது அறிவித்துள்ளார்.

2024-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச்-22ம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட்டு நேற்றைய நாளில் முடிவடைந்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் கொல்கத்தா அணி, ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி இருந்தனர். இதன் மூலம் 3-வது முறையாக கொல்கத்தா அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றினார்கள்.

ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி முடிவடைந்தவுடன் அந்த தொடரில் சிறப்பாக செயலாற்றிய வீரர்களுக்கு விருதுகள் வழங்குவார்கள். அதில் இந்த வருடத்திற்கான சிறப்பான மைதானம் அமைத்ததற்காக ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் அந்த விருதையும், ரூ.10 லட்சத்தையும் பெற்றிருந்தது.

தற்போது, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (BCCI) தலைவரான ஜெய்ஷா மைதானத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்றை அறிவித்துள்ளார். அது என்னவென்றால் மைதானத்தில் உழைத்த ஊழியர்களை பாராட்டும் விதமாக ஐபிஎல் தொடரில் ஆடுகளம் அமைத்த 10 மைதானங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்க உள்ளதாக தனது க்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் அந்த பதிவில், “கடினமான வானிலைகளிலும் கூட அற்புதமான பிட்ச் மற்றும் ஆடுகளங்களை அமைக்க அயராது உழைத்த ஊழியர்களை பாராட்டும் விதமாக 10 மைதானங்களுக்கும் பரிசுத்தொகையாக ரூ.25 லட்சம் வழங்கவுள்ளோம். அவர்களது இந்த கடினமான உழைப்பிற்கு எனது நன்றியும் பாராட்டுக்களும் தெரிவித்து கொள்கிறோம்”, என பதிவிட்டிருந்தார்.

இது மைதானத்தில் கடினமாக உழைக்கும் ஊழியர்களை ஊக்குவித்து அவர்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக பரிசு தொகை அறிவித்ததை கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், இதனால் மைதான ஊழியர்களும் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
devdutt padikkal kl rahul
muthu,meena (29) (1)
ar rahman and saira banu bayilvan ranganathan
adani green energy
adani down