கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் ஜஸ்பிரித் பும்ரா..!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
கொரொனோ 2வது அலையின் தாக்கம் நாடு முழுவதும் தற்போது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கிரிக்கெட் வீரர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்ததா காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் வீரர்கள் அனைவரும் தனது சொந்த நாட்டுக்கு திரும்பி சென்றுள்ளனர்.
கொரோனா வைரஸ் வராமல் தடுக்க அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டு வருகிறார்கள். சிலர் பயந்து கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் இருக்கின்றார்கள். அந்த வகையில் நேற்று கிரிக்கெட் வீரர் பூஜாரா மற்றும் விராட் கோலி கோரோனோ தடுப்பூசி செலுத்திக்கொண்டார்கள்.
அவர்களை தொடர்ந்து தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அதற்கான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ” அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram