ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகினார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் 3 போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் 4 நாட்களாக நடைபெற்றது. இப்போட்டி டிராவில் முடிந்ததால் தற்போது இரு அணிகளும் சமமான புள்ளிகளுடன் உள்ளன. இதற்கு முன் நடைபெற்ற 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 15-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இப்போட்டி தி கப்பா, பிரிஸ்பேன் என்ற மைதானத்தில் நடைபெறவுள்ளது. பிரிஸ்பேனில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஜஸ்பிரீத் பும்ரா விலகினார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வயிற்று வலி காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். சிட்னி டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சின் போது வயிற்று வலியின் அறிகுறிகளை பும்ரா ஏற்கனவே காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத்தொடர்ந்து, ஏற்கனவே பயிற்சயின் பொது காயம் ஏற்பட்ட மாயங்க் அகர்வாலின் உடற்தகுதி குறித்து இந்திய கேட்டறிந்துள்ளது. கட்டைவிரல் காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜாவும் ஏற்கனவே விளையாடவில்லை. மேலும் இந்தத் தொடரின் போது காயமடைந்த முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவுக்குப் பிறகு மூன்றாவது இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும் விலகுகிறார்.சிட்னி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அணியில் சேர்க்கப்பட்ட ஷார்துல் தாக்கூர் மற்றும் டி.நடராஜன் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பிற்கப்படுகிறது.