#INDvENG: ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் அரைசதம் விளாசல்..! இந்தியா திணறல் ..!
ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் அரைசதம் விளாசினர்.
இன்று இந்தியா, இங்கிலாந்து இடையே 2-ம் ஒருநாள் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, முதலில் இறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 336 ரன்கள் எடுத்துள்ளனர்.
இந்நிலையில், இங்கிலாந்து அணி 337 ரன்கள் இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகிறது. தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் விளாசினர்.
தற்போது களத்தில் ஜேசன் ராய் 55*, ஜானி பேர்ஸ்டோவ் 52* ரன்களுடன் விளையாடி வருகின்றனர். இவர்களின் விக்கெட்டை பறிக்க இந்திய அணி திணறி வருகிறது.