நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும் , ஆஸ்திரேலிய அணியும் பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் மோதியது . டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிங்கிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 223 ரன்கள் அடித்தனர். பின்னர் இறங்கிய இங்கிலாந்து அணி 32.1 ஓவரில் 226 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டை இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இப்போட்டியில் 20-வது ஓவரில் கம்மின்ஸ் வீசிய பந்தை ஜேசன் ராய் அடிக்க முயற்சி செய்த போது பந்து பேட்டில் படாமல் கீப்பராக நின்று கொண்டு இருந்த அலெக்ஸ் கேரி சென்றது .பந்தை பிடித்த அலெக்ஸ் கேரி அவுட் என முறையிட நடுவர் தர்மசேனா விக்கெட் கொடுத்து விட்டார்.
அப்போது அதிர்ச்சியடைந்த ஜேசன் ராய் பந்து பேட்டில் படவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.ஆனால் இங்கிலாந்து அணி ஏற்கனவே டி .ஆர் .எஸ் பயன்டுத்தி விட்டதால் ஜேசன் ராய் ஏமாற்றத்துடன் வெளியேறினர்.இப்போட்டியில் ஜேசன் ராய் 65 பந்தில் 85 ரன் குவித்தார் . அதில் 5 சிக்ஸர் ,9 பவுண்டரி அடங்கும்.
ஜேசன் ராய் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போட்டி கட்டணத்தில் இருந்து 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
நாக்பூர் : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வன்முறை வெடித்துள்ள நிலையில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. நாக்பூரில் அவுரங்கசீப்…
சென்னை : கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர்.…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
கலிபோர்னியா : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்கலம்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை…