நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஜேசன் ராய்க்கு அபராதம்!

Default Image

நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும் , ஆஸ்திரேலிய அணியும் பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் மோதியது . டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் களமிங்கிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 223 ரன்கள் அடித்தனர். பின்னர் இறங்கிய இங்கிலாந்து அணி 32.1 ஓவரில் 226 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டை இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டியில் 20-வது ஓவரில் கம்மின்ஸ் வீசிய பந்தை ஜேசன் ராய் அடிக்க முயற்சி செய்த போது பந்து பேட்டில் படாமல் கீப்பராக நின்று கொண்டு இருந்த அலெக்ஸ் கேரி சென்றது .பந்தை பிடித்த அலெக்ஸ் கேரி அவுட் என முறையிட நடுவர் தர்மசேனா விக்கெட் கொடுத்து விட்டார்.

அப்போது அதிர்ச்சியடைந்த ஜேசன் ராய் பந்து பேட்டில் படவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.ஆனால் இங்கிலாந்து அணி ஏற்கனவே டி .ஆர் .எஸ் பயன்டுத்தி விட்டதால்  ஜேசன் ராய் ஏமாற்றத்துடன் வெளியேறினர்.இப்போட்டியில் ஜேசன் ராய் 65 பந்தில் 85 ரன் குவித்தார் . அதில் 5 சிக்ஸர் ,9 பவுண்டரி அடங்கும்.

ஜேசன் ராய் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போட்டி கட்டணத்தில் இருந்து 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்