இங்கிலாந்து அணியை வேகப்பந்து வீச்சில் மிரட்டிய ஜேசன் ஹோல்டர் !
ஜேசன் ஹோல்டர் 6 முறை 5 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளார் என்ற சாதனையும் பெற்றுள்ளார்.
இங்கிலாந்து-வெஸ்டிண்டிஸ் நாட்டிற்கு இடையே 3 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளதாக அறிவித்தது. இந்த நிலையில் அந்த தொடரின் முதல் போட்டி, நேற்று தொடங்கியது 117 நாட்களுக்கு பிறகு நடைபெற்ற இந்த கிரிக்கெட் தொடரில், கொரோனா அச்சம் காரணமாக ரசிகர்கள் மைதானத்தில் போட்டிகளை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் மேலும், ஐசிசி விதித்த புதிய கட்டுப்பாடுகளான, பந்து மீது எச்சிலை தேய்க்ககூடாது, பந்தை தொட்ட பிறகு கிருமி நாசினி வைத்து கைகளை சுத்தம் செய்வது, போன்ற கட்டுப்பாடுகளை, இந்த போட்டியில் அமலில் வருகிறது. இந்த போட்டியானது, இங்கிலாந்து, சவுதம்டனில் உள்ள ரோஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கியது.
இந்த நிலையில் வெஸ்டின்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்கள் மட்டுமே அடித்தது. வெஸ்டின்டீஸ் அணியின் அபார பந்துவீச்சால் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதில் வெஸ்டின்டீஸ் அணிய சேந்த பந்துவீச்சாளர் ஜேசன் ஹோல்டர். 6 விக்கெட்கள் வீழ்த்தி 6 முறை 5 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளார் என்ற சாதனையும் பெற்றுள்ளார்.
Jason Holder has claimed his 7th Test five-wicket haul! ???? #ENGvWI SCORECARD ▶️ https://t.co/J9IrapSl4x pic.twitter.com/oapCai3b2R
— ICC (@ICC) July 9, 2020