உலகக்கோப்பை 5-வது லீக் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதி வருகிறது. ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்யும்போது ‘ஜார்வோ 69’ என்ற பெயர் உள்ள டீம் இந்தியா ஜெர்சி அணிந்த ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் உடனடியாக அவரை பாதுகாப்பு படையினர் மைதானத்தில் இருந்து வெளியேற்றினர். அந்த ரசிகர் விராட் கோலியை நோக்கி ஓடினார். அந்த ரசிகரிடம் இனி எந்தப் போட்டிக்கும் வரக்கூடாது என்று விராட் அறிவுறுத்துகிறார் என்பது விராட்டின் பேச்சில் தெரிந்தது.
இந்த கிரிக்கெட் ரசிகர் இந்திய போட்டியில் இப்படி களம் இறங்குவது இது முதல் முறையல்ல. 2021ல் இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது, தொடர்ந்து மூன்று டெஸ்ட் போட்டிகளில் மைதானத்திற்குள் நுழைந்தார். பின்னர் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
ஜார்வோ யார்?
‘டேனியல் ஜார்விஸ்’ என்ற இயற்பெயரை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். கிரிக்கெட் மைதானத்தில், அவர் ஜெர்சி எண் 69 அணிந்து, ஜார்வோ என்ற பெயரில் நுழைகிறார். ஜார்வோ இங்கிலாந்தின் கென்ட் கவுண்டியில் உள்ள கிரேவ்சென்டில் வசிப்பவர்.அவரது பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் காணப்படுகின்றன.
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…