இந்திய ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த -ஜேம்ஸ் நிஷீம்

இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இறுதி போட்டிக்கு கண்டிப்பாக முன்னேறும் என்ற நம்பிக்கையில் இந்திய அணி ரசிகர்கள் இறுதி போட்டிக்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஏற்கனவே இறுதி போட்டிக்கான டிக்கெட்டை வாங்கி வைத்து உள்ளனர்.
ஆனால் இந்திய அணி அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் தோல்வியை தழுவியது.இதனால் ரசிகர்கள் தாங்கள் வாங்கிய டிக்கெட்டை மற்றவர்களிடம் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நியூஸிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் நிஷீம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு பதிவிட்டு உள்ளார்.அதில் ” அன்பான இந்திய கிரிக்கெட் ரசிகர்களே நீங்கள் இறுதி போட்டியை காணவில்லை என்றால் நீங்கள் வாங்கிய டிக்கெட்டை அதிகாரபூர்வமான இணைதளம் மூலம் விற்று விடுங்கள்.
நீங்கள் வாங்கிய டிக்கெட்டை அதிக லாபத்திற்கு விற்கலாம் என்ற எண்ணம் ஏற்படலாம் ஆனால் உண்மையான கிரிக்கெட் ரசிகர்கள் அந்த டிக்கெட்டை வாங்கும் விதமாக அதிகாரபூர்வமான இணைதளத்தில் நீங்கள் விற்பனை செய்ய வேண்டும் என கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!
March 16, 2025
சுனிதா – வில்மோரை மீட்கும் பணி வெற்றி.! பூமிக்கு திரும்பும்போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்?
March 16, 2025