#INDvsENG : அடுத்தடுத்து சதம் விளாசி ஜெய்ஸ்வால் அசத்தல் ..! 322 ரன்களில் இந்திய அணி முன்னிலை..!

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 3-வது போட்டி ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.  முதல் நாள் முடிவில் இந்திய அணி  5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்திருந்தது. அதை தொடர்ந்து 2-வது நாளில் 445 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

இந்திய அணியில் முதல் இன்னிங்ஸில் ரோஹித் 131 ரன்களும், ஜடேஜா 112 ரன்களும் எடுத்து அசத்தினார். அதை தொடர்ந்து 2-ஆம் நாள் பாதியில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மட்டுமில்லாமல் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தின் இரண்டாம் நாள் பாதியை தங்களது கட்டுக்குள் வைத்திருந்தது. 2-ஆம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 35 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 207 ரன்கள் எடுத்து 238 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது.

#INDvsENG : பென் ஸ்டோக்சை வீழ்த்தி சாதனை படைத்த ஜடேஜா ..!

இந்நிலையில், 3-வது நாள் இன்று தொடங்கப்பட்டது களமிறங்கிய இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்கள் பின்தங்கி இருந்தது. இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக  டக்கெட் 153 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பின் 153 ரன்கள் முன்னிலை பெற்று இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்த முறை ரோஹித் சர்மா 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின் கில்லும், ஜெய்ஸ்வாலும் ஜோடி சேர்ந்தனர். மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தினார். நன்றாக விளையாடி கொண்டிருந்த ஜெய்ஸ்வால் 133 பந்துகளில் 104 ரன்கள் இருந்த பொழுது காயம் காரணமாக ரிட்டையர் (retired hurt) ஆனார்.

தற்போது இந்திய அணியில், கில் 120 பந்துகளில் 65 ரன்களுடனும், குலதீப் யாதவ் 15 பந்துகளில் 3 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். இதனால் இந்திய அணி 51 ஓவருக்கு 2 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்து, 322 ரன்கள் முன்னிலை பெற்று வலுவாக இருக்கிறது. நான்காம் நாள் ஆட்டம் நாளை காலை தொடங்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்